சந்தானம் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,July 12 2019]

காமெடி நடிகராக இருந்தபோது வருடத்திற்கு பத்து படங்களுக்கும் மேல் நடித்து கொண்டிருந்த சந்தானம், ஹீரோவான பின்னர் வருடத்திற்கு ஒரு படம் வெளிவருவதே அரிதாக உள்ளது. 2017ஆம் ஆண்டு 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு பின்னர் 2019ஆம் ஆண்டு தான் அவருடைய அடுத்த படமான 'தில்லுக்கு துட்டு 2' வெளியானது. இந்த நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படமான 'A1' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்த நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியானது. தற்போது இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் ஜூலை 26ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

சந்தானம், தாரா அலிஷா, மொட்ட ராஜேந்திரன், சாய்குமார், எம்.எஸ்.பாஸ்கர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

உன்னை அவ்வளவு சீக்கிரத்தில் நல்லவளாக விடமாட்டோம்: லாஸ்லியாவை வம்புக்கு இழுத்த வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற கொலைகாரன்' டாஸ்க் நேற்று முடிவடைந்தது. இந்த டாஸ்க்கில் வனிதா மற்றும் மோகன் வைத்யா சிறப்பாக விளையாடியவர்களாக

பிரபல நடிகையை காரில் இருந்து தூக்கி வீசிய டிரைவர்: போலீசார் அதிரடி நடவடிக்கை

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரை தனியார் கார் நிறுவனத்தின் டிரைவர் காரில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கியதை அடுத்து நடிகை போலீஸ் புகார் கொடுத்துள்ளார்.

இயக்குனர் ரஞ்சித் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிய பா.ரஞ்சித் அவர்களின் தந்தை பாண்டுரங்கன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 63

'ஜிவி' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்!

சமீபத்தில் வெளியான ஜிவி திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

நாளை முதல் 'ராட்சசி' படத்திற்கு கட்டணக்குறைப்பு!

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.