சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,July 15 2016]

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செல்வராகவன் தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இதுவரை கனமான பாத்திரங்களுடன் அழுத்தமான திரைக்கதை அம்சங்களுடன் கூடிய படங்களை இயக்கி வந்த செல்வராகவன் முதல்முறையாக ஒரு ஜாலியான காமெடி படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு கூறப்படுவதற்கு முக்கிய காரணம் அவர் தேர்வு செய்துள்ள ஹீரோ
ஆம் செல்வராகவன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த தகவலை செல்வராகவன் மற்றும் சந்தானம் ஆகிய இருவருமே தங்கள்த சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளனர் இருவேறு துருவங்கள் இணையும் இந்த படம் இப்பவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷின் 'வடசென்னை'யில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்

பிரபல நடிகர் விஜய்சேதுபதிக்கு தொடர்ச்சியாக சுமாரான வெற்றி படங்களே வெளிவந்து கொண்டிருந்த நிலையில்...

'கபாலி' ரூ.500 கோடி வசூல் செய்யும். கலைப்புலி எஸ்.தாணு நம்பிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள பிரமாண்டமான திரைப்படம் 'கபாலி' வரும் 22ஆம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...

'கபாலி' பட வழக்கு. மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடும் இணையதளங்கள்...

'தல 57': அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

'ஏகே 57' என்று கூறப்படும் தல அஜித்தின் 57வது படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில்...

சென்னையில் 'கபாலி' பிரிமியர் காட்சி குறித்த முக்கிய தகவல்

வெளிநாடுகளில் ரிலீசுக்கு முந்தைய நாள் பிரிமியர் காட்சி திரையிடப்படுவதை போல சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி'...