சந்தானம் நடிக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Friday,July 28 2017]

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன சந்தானம் நடித்து வரும் படங்களில் ஒன்று 'சர்வர் சுந்தரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது.

சென்சார் அதிகாரிகள் 'சர்வர் சுந்தரம்' படத்தை பார்த்து 'யூ' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இந்த தகவலை இயக்குனர் ஆனந்த் பால்கி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். 'சர்வர் சுந்தரம்' படத்தின் சென்சார் முடிந்துவிட்டதால் மிக விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

சந்தானம், வைபவி, பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு பிகே வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

அஜித்தின் அர்ப்பணிப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. கருணாகரன்

அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தில் காமெடி நடிகராக கருணாகரன் நடித்துள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று காலை முதல் கருணாகரனின் 'விவேகம்' ஸ்டில்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது...

பாகிஸ்தான் பிரதமர் திடீர் நீக்கம்! ராணுவம் கைக்கு செல்கிறதா ஆட்சி?

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அவ்வப்போது ராணுவம் ஆட்சியை கைப்பற்றி வருவது தெரிந்ததே...

விரக்திக்கு உள்ளாகும் ஓவியா: புரட்சிப்படை கொந்தளிப்பு

பிக்பாஸ் வீட்டில் எப்போதுமே  ஜாலியாக சிரித்த முகத்துடன் இருப்பது ஓவியா மட்டுமே. ஆனால் அவரை வெறுப்பேற்றி அழவைத்து பார்ப்பதே ஒருசிலருக்கு முழு நேர பணியாக உள்ளது. குறிப்பாக ஜூலியை கூறலாம்...

உனக்கென்ன கொம்பு முளைச்சிருக்கா? ஜூலியை மிரட்டிய காயத்ரி

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும்பாலும் சுவாரஸ்யமாகவும், சில சமயம் சொதப்பலாகவும் போய்க்கொண்டிருக்கின்றது. ஓவியாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அனைவரும் கார்னர் செய்த நிலையில் தற்போது ஓவியாவின் பக்கம் ஒவ்வொருவராக சாய ஆரம்பித்துவிட்டனர்...

அடுத்த படம் 'அயன் 2'? கே.வி.ஆனந்த் விளக்கம்

கடந்த இரண்டு நாட்களாக ஒருசில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் கடந்த 2009ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'அயன் 2' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன....