close
Choose your channels

சந்தானம் நடிக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் சென்சார் தகவல்கள்

Friday, July 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன சந்தானம் நடித்து வரும் படங்களில் ஒன்று 'சர்வர் சுந்தரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது.

சென்சார் அதிகாரிகள் 'சர்வர் சுந்தரம்' படத்தை பார்த்து 'யூ' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இந்த தகவலை இயக்குனர் ஆனந்த் பால்கி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். 'சர்வர் சுந்தரம்' படத்தின் சென்சார் முடிந்துவிட்டதால் மிக விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

சந்தானம், வைபவி, பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு பிகே வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.