மனோரமா இறுதிச்சடங்கில் முதல்வர் பேசவில்லையா? சரத்குமார் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,October 14 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் அணியினர்களும், விஷால் அணியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். இந்நிலையில் மனோரமாவின் இறுதிச்சடங்கிற்கு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனோரமா குறித்து பிரபுவிடம் மட்டுமே சில தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டதாகவும், அவருக்கு அருகில் நின்றிருந்த சரத்குமாரை அவர் கண்டு கொள்ளவில்லை என்றும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளுங்கட்சியின் ஆதரவு சரத்குமாருக்கு இல்லை என்பதுபோல இந்த செய்திகள் மிகைப்படுத்தியதால், இதுகுறித்து சரத்குமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அன்றைய தினம் தான் முதல்வரை சந்தித்து பேசியதாகவும், ஆனால் பேசிவிட்டு வெளியே வரும்போது எடுத்த புகைப்படங்களை மட்டும் ஒருசில ஊடகங்கள் வெளியிட்டு இல்லாத ஒன்றை கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவறான செய்திகள் கலங்க படுத்தும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில்தான் எத்தனை மகிழ்ச்சி என அவர் வருத்தத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆளுங்கட்சி ஆதரவு நடிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் இஷ்டம்போல் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கலாம் என அதிமுக தலைமை கூறியுள்ள நிலையில் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் அரவிந்தசாமி?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்த 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின்...

சி.வி.குமாரின் நிறுவனத்தின் '144' முடிந்தது

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட சமீபத்தில் வெளியான 'இன்று நேற்று நாளை' வரை பல வெற்றிப்படங்களை தயாரித்த சி.வி.குமார்...

'புலி' படத்தின் முதல்வார வசூல். SKT Studios நிறுவனம் தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்த போதிலும்...

அஜீத்தின் 'வேதாளம்' படத்தில் பாலிவுட் பாட்ஷா

தல அஜித் நடித்துள்ள 'வேதாளம்' படத்தின் 'தரலோக்கல்' ஆடியோ டீசர் இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் பாலிவுட் பாட்ஷா...

காமெடி நடிப்பில் விஜய்யை அசத்திய மொட்டை ராஜேந்திரன்

ஆரம்ப காலகட்டத்தில் வில்லனுக்கு அடியாளாக, பின்னர் மெயின் வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரனுக்கு 'விஜய் 59' திரைப்படம் ஒரு மறக்க முடியாத படமாக அமையும் என கூறப்படுகிறது.....