விஜய்யின் 'வாரிசு' ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படமா? சரத்குமார் வெளியிட்ட ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்து நடிகர் சரத்குமார் கூறிய தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘வாரிசு’ திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படம் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் சரத்குமார், ‘வாரிசு’ திரைப்படம் ஒரு முழுமையான ஃபேமிலி சப்ஜெக்ட் படம் என்று யார் சொன்னது? என கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த படத்தில் ஃபேமிலி சப்ஜெட்டும் இருக்கும், அதேநேரத்தில் என்டர்டைன்மென்ட், சண்டைக்காட்சிகள், பாடல்கள் என எல்லாம் இருக்கும் என்றும் மொத்தத்தில் இந்த படம் ஒரு முழுமையான அன்பை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஜய் ரசிகர்களுக்கான ஆக்சன் காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் இந்த திரைப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசையில் வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பொன்னியின் செல்வன்' பர்ஸ்ட்சிங்கிள் பாடல்: பாடகர், பாடலாசிரியர் பெயர்கள் இதோ!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில்

ஒரே ஒரு தமிழ் படத்தில் நடிக்க நடிகைக்கு நயன்தாராவை விட 4 மடங்கு சம்பளமா?

'தி லெஜண்ட்'திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு நயன்தாராவை விட நான்கு மடங்கு சம்பளம் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தையின் 70வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய புன்னகை அரசி நடிகை!

தமிழ் திரையுலகின் புன்னகை அரசி என்று போற்றப்படும் நடிகை சினேகா தனது தந்தையின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள

பிரபல தமிழ் பாடகர் மகளின் செம போட்டோஷூட்: வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகின் பிரபல பாடகரின் மகள் போட்டோ ஷூட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

காயமடைந்த சம்யுக்தா ஹெக்டே எப்படி இருக்கிறார் பாருங்கள்: வைரல் புகைப்படம்

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' என்ற திரைப்படம் உள்பட பல படங்களில் நடித்திருந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே சமீபத்தில்  படப்பிடிப்பின் போது காயமடைந்தார் என்றும், இதனையடுத்து அவர் சிகிச்சை