close
Choose your channels

பிரபல தமிழ் பாடகர் மகளின் செம போட்டோஷூட்: வைரலாகும் புகைப்படங்கள்!

Saturday, July 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பிரபல பாடகரின் மகள் போட்டோ ஷூட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவர் ஸ்ரீனிவாஸ். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இரண்டாவது மகள் சுனந்தாவின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கார்ப்பரேட் நிறுவனமொன்றில் மீடியா சம்பந்தப்பட்ட பணியில் இருந்து சுனந்தா ஒரு மாற்றத்திற்காக இந்த போட்டோ ஷூட் புகைப்படத்தை எடுத்துள்ளதாக பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் நடித்த ’நம்மவர்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சொர்க்கம் என்பது நமக்கு’ என்ற பாடலின் மூலம் பாடகராக அறிமுகமானவர் ஸ்ரீநிவாஸ். இதனை அடுத்து ஏஆர் ரகுமான் இசையில் ’பம்பாய்’, ‘மிஸ்டர் ரோமியோ, ‘மின்சாரகனவு’, ’ரட்சகன்’ ’படையப்பா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி என சுமார் மூவாயிரம் பாடல்களை ஸ்ரீனிவாஸ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.