லெஜண்ட் சரவணன் படத்தின் அதிரடி அறிவிப்பு.. இன்றே ஸ்பெஷல் விருந்து..!

  • IndiaGlitz, [Friday,March 03 2023]

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது என்றும் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட அனைத்து படங்களும் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ’தி லெஜெண்ட்’ திரைப்படம் ரிலீஸாகி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் ஓடிடியில் வெளியாகாமல் இருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பலர் சமூக வலைத்தளங்களில் ’தி லெஜெண்ட்’ எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று கேள்வி எழுப்பி வந்தனர் இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் ’தி லெஜெண்ட்’ திரைப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் மதியம் 12:30 மணி முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு ’தி லெஜெண்ட்’ திரைப்படத்தை இன்றே பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.