இன்று மாலை 6 மணிக்கு 'சர்கார்' படத்தின் அடுத்த டீசர் ரிலீஸ்

  • IndiaGlitz, [Tuesday,October 23 2018]

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'சர்கார்' திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி உலக அளவில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனையும் செய்தது.

இந்த நிலையில் இன்று மாலை 'சர்கார்' படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகவுள்ளது. தமிழகத்தை போல தெலுங்கு மாநிலங்களான ஆந்திர பிரதேசம், மற்றும் தெலுங்கானாவில் விஜய்க்கு என ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருப்பதால் இந்த தெலுங்கு டீசரை வரவேற்க தெலுங்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். தமிழ் டீசரை போலவே தெலுங்கு டீசரும் உலக சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் தீபாவளி விருந்தாக 'சர்கார்' திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரசிகர் மன்றத்தின் மூலம் அரசியலில் ஜெயித்துவிடலாம் என்பது பைத்தியக்காரத்தனம்: ரஜினிகாந்த்

ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்து கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது

எனக்கே பாவமா இருக்குது: பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து கஸ்தூரி

திரையுலகை பொருத்தவரையில் பாலியல் தொல்லை அனுபவம் பெறாத நடிகைகளே மிகவும் குறைவு என்று கூறலாம். ஒருசிலர் இதனை துணிவுடன் எதிர்கொண்டு வெற்றி கொண்டுள்ளனர்.

ரஜினியுடன் நடித்த அனுபவம்: ஒரு இளம் நடிகையின் மகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பதே சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு நடிகர், நடிகையின் வாழ்நாள் ஆசையாக இருக்கும். சிலருக்கு மிக எளிதிலும்,

வில்லன் யார்? 'ராட்சசன்' விஷ்ணுவிடம் ரஜினி கேட்ட கேள்வி

விஷ்ணுவிஷால், அமலாபால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது.

குற்றாலத்தை அடுத்து தாய்லாந்துக்கு பறந்த விஜய்சேதுபதி-அஞ்சலி

விஜய்சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும் மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கும் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.