close
Choose your channels

ஸ்கைடைவிங் செய்யும் 'சார்பாட்டா பரம்பரை' நடிகை: செம த்ரில் வீடியோ

Tuesday, May 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த ‘சார்பாட்டா பரம்பரை' என்ற படத்தில் நாயகியாக நடித்த துஷாரா விஜயன், ஸ்கை டைவிங் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

’போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தில் சின்ன கேரக்டரில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். அதன்பின்னர் பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கேரக்டரில் மிகவும் பிரமாதமாக நடித்திருந்தார். அவருடைய நடிப்பிற்கு ஊடகங்களின் வாழ்த்துமழை குவிந்தது. இதனையடுத்து தற்போது ‘அன்புள்ள கில்லி’, ’நட்சத்திரம் நகர்கிறது’, ‘அநீதி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் துஷாரா விஜயன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் துபாய் சென்ற துஷாரா விஜயன், அங்கு ஸ்கை டைவிங் செய்த த்ரில் வீடியோவையும் கண்கவர் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.