சசிகலாவுக்கு 5 நாள் பரோல். இன்று மாலை சென்னை வருகிறார்

  • IndiaGlitz, [Friday,October 06 2017]

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்து இன்று மாலை பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் சசிகலா வருகிறார் என்றும் தினகரன் அணி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை சந்திக்க தன்னை 15 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் பரோல் விண்ணப்ப மனு சிறைத்துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது. இந்த மனுமீதான சட்டநடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கிடைத்துள்ளது

எனவே இன்று மாலை சசிகலா சென்னை வரும் சசிகலா சென்னை தியாகராயநகரில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் சசிகலா தங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று மாலையே அவர் கணவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு செல்வார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், ஊடகங்களை சந்திக்கக்கூடாது என்றும் சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

More News

திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் ஏ.எம்.ரத்னம் மருமகள்

ஏ.எம்.ரத்னம் அவர்களின் மகன் ஜோதிகிருஷ்ணா ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவருடைய மனைவி ஐஸ்வர்யா பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிபிராஜ்

சத்யராஜ் மகனும், இளையதலைமுறை நடிகர்களில் ஒருவருமான சிபிராஜ் இன்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடி வரும் நிலையில் IndiaGlitz சார்பில் அவருக்கு எங்களது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தளபதியின் 'மெர்சலுக்கு புகழாரம் சூட்டிய பிரமாண்ட இயக்குனர்

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலி விஜய்யின் 'மெர்சல்' படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று வாழ்த்துக்கள் கூறி அந்த படத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார்

பிரியாணிக்காக சேர்ந்த கூட்டம் அல்ல, தானா சேர்ந்த கூட்டம். ஓவியா

பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளை ஓவியாவுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில் தினமும் அவர் ஏதாவது ஒரு விஷயத்திற்காக டிரெண்டில் உள்ளார்

மருத்துவ கல்லூரி மாணவிக்கு ஜி.வி.பிரகாஷின் மகத்தான உதவி

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் எந்த ஒரு சமூக பிரச்சனைகளுக்கும் திரையுலகில் இருந்து குரல் கொடுக்கும் முதல் நபராக இருந்து வருகிறார்.