சசிகலா எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன். தீபா ஆவேச பேட்டி

  • IndiaGlitz, [Wednesday,January 04 2017]

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்த அவரது தோழி சசிகலா, விரைவில் முதல்வர் பதவியையும் ஏற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கூடிய விரைவில் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வாய்ப்பு இருப்பதாகவும், முதல்வர் பதவியை ஏற்ற பின்னர் எம்.எல்.ஏ ஆக, தென்மாவட்டங்களில் பாதுகாப்பான தொகுதியை அதிமுகவினர் தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக ஆண்டிப்பட்டி அல்லது உசிலம்படி தொகுதியில் சசிகலா போட்டியிடலாம் என தெரிகிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சசிகலா எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
"சசிகலா முதல்வர் ஆனாலும், பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அங்கு போட்டியிடுவேன். சாதி அரசியல் என்பதெல்லாம் இங்கு எடுபடாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள்.
அவர் உசிலம்பட்டியில் போட்டியிட்டாலும் களமிறங்குவேன். திண்டுக்கல் தொகுதியில் மாயத் தேவரை நிறுத்தி வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் களத்தில் தலைவராக உருவெடுத்தார் எம்.ஜி.ஆர். அதைப்போல, ஜெயலலிதாவின் ரத்த உறவான என்னை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள். சசிகலாவின் சமூகத்து மக்களுக்கும் நான் யார் என்பது தெரியும். அவர்களும் என்னை ஆதரிப்பார்கள். பெண்கள் ஆதரவு முழுமையாக எனக்கு இருக்கிறது.
இரட்டை இலை சின்னம் ஒரு பிரச்னையே இல்லை. தலைமைக்குத்தான் ஓட்டு கிடைக்கும். பென்னாகரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு டெபாசிட் பறிபோனதும் மதுரை மேற்கில் தே.மு.தி.கவோடு திணறிய காலமும் உண்டு. எனவே, இரட்டை இலை சின்னத்தினால் மட்டும் சசிகலா வெற்றி பெற முடியாது. தேர்தல் களத்தில் மூன்றாவது இடத்துக்குத்தான் தள்ளப்படுவார். அதிகாரத்தையும் பலத்தையும் மீறி மக்கள் ஆதரவில் வெற்றி பெறுவேன்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்ததைப் போல, சசிகலாவை தோற்கடிப்பேன். அதிகாரத்துக்குள் அவர் காலடி எடுத்து வைக்கும்போது, என்னுடைய முடிவை அறிவிப்பேன்" என தேர்ந்த அரசியல் தலைவரைப் போல் விவாதித்திருக்கிறார்.
இவ்வாறு தீபா பேட்டியில் தெரிவித்தார்.

More News

கார்த்தியின் முதல் பாலிவுட் படம் இதுதான்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி. திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சற்று முன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது...

விஜய்-அஜித். யாருக்கு முதலிடம். காஜல் அகர்வாலின் புத்திசாலித்தனமான பதில்

விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களான 'துப்பாக்கி' மற்றும் 'ஜில்லா' ஆகிய படங்களின் நாயகியும், அஜித்...

விஜய் படத்துக்குப் போட்டியாக மற்றொரு விஜய் படத்தின் ரீமேக்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் நேற்று சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்றது என்பதையும், இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இளையதளபதியின் 'பைரவா' சென்சார் தகவல்கள்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று பல...