close
Choose your channels

'இதை சொன்ன புறம்போக்கு மட்டும் என் கையில கிடைச்சான்.... 'நான் மிருகமாய் மாற' டிரைலர்

Friday, October 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் நடித்த ’நான் மிருகமாய் மாற’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் தற்போது புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன.

அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வில்லனிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சசிகுமார் எடுக்கும் அதிரடி ஆக்ஷன் நடவடிக்கைகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது.

’எளியோரை வலியோர் வாட்டினால், வலியோரை தெய்வம் வாட்டும்’ இதை சொன்ன புறம்போக்கு மட்டும் என் கையில கிடைச்சா, அவனை துண்டு துண்டாய் வெட்டி கொல்வேன்’ என்ற சசிகுமாரின் வசனம் இந்த டீசரின் ஹைலைட்டாக உள்ளது.

இந்த படத்தின் டீசரில் உள்ள காட்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே ரத்தமும் சதையுமாக இருப்பதால் இந்த படம் ஆக்ஷன் ரசிகர்களுக்கு ஏற்ற படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சென்டிமென்ட் காட்சிகளும் உள்ளது என்பது ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

சசிகுமார் ஜோடியாக ஹரிப்பிரியா நடித்துள்ள இந்த படத்தில் வில்லனாக விக்ராந்த் நடித்துள்ளார் என்பதும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.