close
Choose your channels

சசிகுமாரின் அடுத்த படத்தில் வில்லனாகும் 'சாத்தான்' விக்ராந்த்: திகில் வீடியோ

Friday, February 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் அடுத்த படத்தில் விக்ராந்த் வில்லனாக நடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ திகிலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

சசிகுமார் நடித்து வரும் படங்களில் ஒன்று ’காமன்மேன்’ என்பதும் இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் சசிகுமார் சவுண்ட் இன்ஜினியர் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் வீடியோவில் விக்ராந்த் இந்த படத்தில் ‘சாத்தான்’ என்ற வில்லன் கேரக்டரில் நடித்து உள்ளதாக தெரிகிறது. இது குறித்து வெளியான வீடியோவில் அவர் அரிவாளால் ஒருவரை சரமாரியாக வெட்டும் காட்சி பெரும் திகிலை ஏற்படுத்தி உள்ளது.

சசிகுமார், ஹரி பிரியா, விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சத்யசிவா இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணியையும் செய்து உள்ளனர் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment