தீபாவளி ரேஸில் இணையும் சசிகுமார் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,October 20 2021]

வரும் தீபாவளி திருநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ மற்றும் விஷால் நடித்த ’எனிமி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவான ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 4ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராகி விட்ட போதிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது என்பதும் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமேசான் ஓடிடியில் சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் சசிகுமாரின் ’எம்ஜிஆர் மகன்’ ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார் ஜோடியாக மிருணாளினி நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடகர் அந்தோணிதாசன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

More News

வாகா எல்லையில் இராணுவ வீரர்களுடன் கைக்குலுக்கும் தல அஜித்… வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் தல அஜித் பைக் ரேஸ்,

தனி இசைப்பாடல் குறித்து அதிரடி கருத்துத் தெரிவித்த “குக்வித் கோமாளி“ அஸ்வின்!

சமீபகாலமாக தமிழ் சினிமா வட்டாரத்தில் தனி இசைப் பாடல்கள் வெற்றிப்பெற்று வருகின்றன.

ரொம்ப கேவலமா இருக்கு: அபிஷேக்கை வச்சு செஞ்ச அண்ணாச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் ஒவ்வொரு புரமோவில் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் ஒரு மணி நேர நிகழ்ச்சியில் அவர் கிட்டத்தட்ட பாதி நேரம் வந்துவிடுகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

பெட்டில் சுகமா படுத்துக்கொண்டு படம் பார்க்க ரூ.25 லட்சம் சம்பளமா? பலே தகவல்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று விதவிதமான புதுப்புது மெத்தைகளில் படுத்துக்கொண்டு தினமும் Netfilx-இல் படம்பார்க்க

அவரு என் அண்ணன்… மெண்டர் தோனியின் வருகையைக் கொண்டாடும் இளம் வீரர்!

டி20 உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு மெண்ட்ராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.