close
Choose your channels

சசிகுமாரின் அடுத்த பட பூஜை.. தயாரிப்பாளர், இயக்குநர் அறிவிப்பு..!

Thursday, May 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் நடித்த ’அயோத்தி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சசிகுமார் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளார் என்றும் இந்த படத்தை ஆர்டிஎம் என்பவர் இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஆர்டிஎம் ஏற்கனவே ’காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார் ஜோடியாக நவீன் சந்திரா என்பவர் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சசிகுமார் ஏற்கனவே ’பகைவனுக்கு அருள்வாய்’ ’நாநா’ மற்றும் நந்தன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் இன்னொரு படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment