'வெற்றிவேல்' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Friday,April 08 2016]
'படிக்கலைன்னாலும் நானும் வாத்தியார்தான். அவங்க பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குறாங்க..நான் பயிருக்கு உரத்தை போட்டு வளர்க்குறேன்' என்ற வசனத்துடன் ஆரம்பமாகிறது சசிகுமாரின் 'வெற்றிவேல்' டிரைலர்.

சசிகுமார், மியா ஜார்ஜ் காதலுடன் டிரைலர் ஆரம்பித்தாலும் 'நாடோடிகள்' பாணியில் காதலர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் கதாபாத்திரத்தை மீண்டும் சசிகுமார் எடுத்துள்ளார் என்பது இந்த டிரைலரில் இருந்து தெரிகிறது.
பிரபுவின் பிரசிடெண்ட் தோற்றம், மியா ஜார்ஜின் அழகு, அதிர வைக்கும் சண்டைக்காட்சிகள், தம்பி ராமையாவின் காமெடி, காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள் என இயக்குனர் வசந்தமணி விறுவிறுப்பாக ஒரு படத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
டி.இமானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகிய நிலையில் டிரைலரின் பின்னணி இசையும் குறிப்பிடும்படி அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்த டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதே உண்மை..

More News

2.0 படத்தின் வில்லன் அக்சயகுமார்

விரைவில் வெளியாகிறது 'தெறி'யின் போனஸ்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் தெறியாக வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின்...

விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை 6.30க்கு ஒரு சர்ப்ரைஸ்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், நடித்துள்ள 'தெறி' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ...

ஹீரோவாகிறார் இன்னொரு இசையமைப்பாளர்?

கோலிவுட் திரையுலகில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்கள் ஹீரோவாக மாறி வெற்றி பெற்று வரும் நிலையில்...

த்ரிஷாவின் 'நாயகி' ஆடியோ ரிலீஸ் தேதி

கோலிவுட், டோலிவுட் படவுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை த்ரிஷா தற்போது...