close
Choose your channels

'வெற்றிவேல்' டிரைலர் விமர்சனம்

Friday, April 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
'படிக்கலைன்னாலும் நானும் வாத்தியார்தான். அவங்க பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குறாங்க..நான் பயிருக்கு உரத்தை போட்டு வளர்க்குறேன்' என்ற வசனத்துடன் ஆரம்பமாகிறது சசிகுமாரின் 'வெற்றிவேல்' டிரைலர்.

சசிகுமார், மியா ஜார்ஜ் காதலுடன் டிரைலர் ஆரம்பித்தாலும் 'நாடோடிகள்' பாணியில் காதலர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் கதாபாத்திரத்தை மீண்டும் சசிகுமார் எடுத்துள்ளார் என்பது இந்த டிரைலரில் இருந்து தெரிகிறது.
பிரபுவின் பிரசிடெண்ட் தோற்றம், மியா ஜார்ஜின் அழகு, அதிர வைக்கும் சண்டைக்காட்சிகள், தம்பி ராமையாவின் காமெடி, காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள் என இயக்குனர் வசந்தமணி விறுவிறுப்பாக ஒரு படத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
டி.இமானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகிய நிலையில் டிரைலரின் பின்னணி இசையும் குறிப்பிடும்படி அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்த டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதே உண்மை..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.