சன்னிலியோன் - தர்ஷா குப்தாவை ஒப்பிட்ட சதீஷ்: 

அவங்க சொல்ல சொன்னாங்க சொன்னேன்: சன்னிலியோன் - தர்ஷா குப்தா சர்ச்சைக்கு விளக்கம் அளித்த சதீஷ்

சமீபத்தில் நிகழ்ந்த ’ஓ மை கோஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சன்னி லியோன், தர்ஷா குப்தா, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் சதீஷ் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது சதீஷ் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சதீஷ் பேசிய போது, ‘மும்பையில் இருந்து வந்திருக்கும் சன்னிலியோன் பட்டுச்சேலை அணிந்து வந்து இருக்காங்க, ஆனால் நம்ம கோயம்புத்தூர் பொண்ணு எப்படி டிரஸ் பண்ணிட்டு வந்திருக்காங்கன்னு பாருங்க என சன்னிலியோன் மற்றும் தர்ஷா உடைகளை ஒப்பிட்டு காமெடியாக பேசினார்.

காமெடியாக சதீஷ் பேசினாலும் ஒரு சிலர் இதை சீரியசாக எடுத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் சதீஷ்க்கு கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பாடகி சின்மயி மற்றும் இயக்குனர் நவீன் ஆகியோர் தங்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இயக்குநர் நவீன் இதுகுறித்து கூறும்போது, ‘சன்னி லியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும் கோயம்புத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்தப் பெண்களின் தனிப்பட்ட உரிமை.சதீஷ் சகோதரரே! உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான்! மாற்றமே கலாச்சாரம்’ என்று பதிவு செய்துள்ளார். அதேபோல் பாடகி சின்மயில், ‘இது காமெடியாக பேசப்படும் பேச்சு அல்ல என்றும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து நடிகர் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில் ’இந்த படத்தின் இசை விழாவின் போது தர்ஷா என் அருகே அமர்ந்து இருந்தார். அப்போது சன்னி லியோனை விட நான் மாடலாக டிரஸ் பண்ணிட்டு வந்து இருக்கேன், அவங்க எப்படி வராங்கன்னு பார்ப்போம் என்று கூறினார். அதன்பின் சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர், ‘நான் இப்படி வந்து இருக்கேன், அவங்க அப்படி வந்துருக்காங்க, நான் அப்செட் ஆயிட்டேன், இதை நீங்கள் பேசும்போது சொல்லுங்கள்’ என்று கூறியதாகவும், தர்ஷா சொல்ல சொன்னதால் தான் அதை நான் தெரிவித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

More News

LCU-வில் இணைகிறாரா தல? லோகேஷ் கனகராஜ் சூப்பர் தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவரை ரசிகர்கள் 'லோகேஷ் சினிமா யுனிவர்ஸ்' என்ற LCU பட்டத்தை அளித்து

லைகா நிறுவனத்தின் அடுத்த படம் இதுதான்: மாஸ் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

'துணிவு' திரைப்படத்தில் அஜித் பாட்டு பாடியிருக்கின்றாரா?

தளபதி விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. குறிப்பாக 'வாரிசு' திரைப்படத்திலும் அவர் ஒரு பாடலை பாடியுள்ளார்

உடம்பு முழுவதும் பேண்டேஜ்.. என்ன ஆச்சு இந்த நடிகைக்கு? 

பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியின் போட்டியாளரும் தொலைக்காட்சி நடிகையுமான உர்ஃபி ஜாவித் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வீடியோக்கள்

உங்களுக்கு BP இருக்கா அசீம்? ரவுண்டு கட்டிய ஜனனி!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அசீம், கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டை போட்டு விட்டார் என்பதும், தான் சொல்ல வேண்டிய கருத்தை ஆவேசமாக கூறிவிட்டு எதிராளியின் கருத்தை