close
Choose your channels

'துணிவு' திரைப்படத்தில் அஜித் பாட்டு பாடியிருக்கின்றாரா?

Thursday, November 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. குறிப்பாக ’வாரிசு’ திரைப்படத்திலும் அவர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் அந்த பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்யை போலவே அஜித்தும் ’துணிவு’ படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளதாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரித்தபோது ’துணிவு’ படத்தின் புரமோஷன் பாடல் ஒன்று படமாக்கப்பட்டதாகவும் இந்த பாடலை ஹிப் ஹாப் தமிழா ஆதி பாடி உள்ளதாகவும் தெரிகிறது .

‘காசேதான் கடவுளப்பா’ என்று தொடங்கும் இந்த பாடல் மாஸ் பாடலாக உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பாடலில் அஜித்தும் பாடியிருப்பதாக கூறப்பட்டாலும் உண்மையில் அஜித் பாடவில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த பாடலின் இடையிடையே அஜித்தின் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த மாஸ் வசனங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புரோமோஷனல் பாடலின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாகவும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக மிக விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பாடலில் அஜீத் மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் அனைவரும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொகைன், அமீர், பாவனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos