சதீஷின் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்களா? வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Saturday,May 07 2022]

நடிகர் சதீஷ் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை நடந்துள்ள நிலையில் இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சதீஷ் சமீபத்தில் வெளியான ’நாய் சேகர்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் ’ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை தற்போது நடைபெற்று உள்ளது. இந்த பூஜை குறித்த புகைப்படங்களை சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் மோனிகா, ஐஸ்வர்யா தத்தா, மானஸா உள்பட நால்வர் இருப்பதால் நால்வருமே ஹீரோயின்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி விஜய் டிவி புகழ், கருணாகரன் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த முழு விவரங்களை விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

'கேஜிஎப் 2' படத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 'கேஜிஎப்' மற்றும் 'கேஜிஎஃப் 2' படங்களில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் இன்று மரணமாகி உள்ளதை அடுத்து படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு: 12 நிமிட வீடியோ வைரல்!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதிஜா - ரியா ஷேக் முகமது திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது

கோடை வெயிலால் கிளாமருக்கு மாறிய காஜல் அகர்வால்: வைரல் புகைப்படம்

கோடை வெயில் காரணமாக கிளாமருக்கு மாறிய காஜல் அகர்வாலின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண தேதி இதுவா? எங்கே நடக்கப்போகுது தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

இனி யூ டியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க கட்டணம் வசூலிப்பேன்: பிரபல தயாரிப்பாளர்

 பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இனி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க பணம் வாங்குவேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது