திருமணத்திற்கு பின் புதிய அவதாரம் எடுத்த சதீஷ்


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’தலைவர் 168’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் திருமணமான சதீஷ் தற்போது பாடகர் அவதாரம் எடுத்துள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய செய்தியை அறிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் உருவாகிவரும் ’ராஜவம்சம்’ என்ற திரைப்படத்திற்காக சதீஷ் ஒரு பாடலை பாடுவது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் தான் பாடகர் ஆகிவிட்டதை அறிவிப்பதற்காக இந்த புகைப்படத்தை முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவிபிரகாஷ், அனிருத், தமன், டி.இமான், விஜய் ஆண்டனி, தேவிஶ்ரீபிரசாத், சீன் ரோல்டன் என பிரபல இசையமைப்பாளர்களின் பெயர்களையும் அவர் டேக் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடகர் அவதாரம் எடுத்துவிட்ட சதீஷை மேற்கண்ட இசையமைப்பாளர்கள் பாட அழைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
?? ?? ?? ?? ??????
— Sathish (@actorsathish) February 4, 2020
Thank u so much @SamCSmusic bro.... For ur information @gvprakash @anirudhofficial @MusicThaman @arrahman @ThisIsDSP @vijayantony @immancomposer @RSeanRoldan @hiphoptamizha #RajaVamsam pic.twitter.com/s39fPvcxev
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments