சமூக போராளிகளின் கையினால் விருதினை பெற்ற சத்யராஜ்

  • IndiaGlitz, [Saturday,January 20 2018]

பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு சமீபத்தில் விகடன் நிறுவனம் சிறந்த குணசித்திர விருதினை வழங்கியது. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் தனது சிறப்பான நடிப்பினால் முத்திரை பதித்த சத்யராஜூக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விருதினை தான் ஒரு சமூக போராளியிடம் இருந்து பெற விரும்புவதாக சத்யராஜ், விருது வழங்கும் குழுவினர்களிடம் கேட்டு கொண்டதாகவும், சத்யராஜின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள், அவருக்கு இந்த விருதினை கவுசல்யா சங்கர் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர்களை வரவழைத்து அளிக்க ஏற்பாடு செய்தது

ரசிகர்களை தங்களது சுயலாபத்திற்காகவும், அரசியல் கட்சிக்காகவும் பயன்படுத்தி வரும் நடிகர்கள் மத்தியில் பெற்றோர்களாக இருந்தாலும் தண்டனை வாங்கி தந்து சமூக நீதியை காக்க போராடிய கவுசல்யா சங்கர் மற்றும் தமிழர்களின் உரிமைகளுக்காம போராடும் திருமுருகன் காந்தி ஆகியோர்களிடம் விருதினை பெற விரும்புவதாக கூறிய சத்யராஜூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

'காலா' படத்தின் முக்கிய பணியில் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் நடித்த '2.0' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

ஜீவா பிஞ்சிலேயே பழுத்தவர். விஜய்சேதுபதி பழுத்து பிஞ்சானவவர்: கீ ஆடியோ விழாவில் கே.வி.ஆனந்த்

ஜீவா, கோவிந்த், நிக்கி கல்ராணி, அனைய்கா சோட்டி, சுஹாசினி, ஆர்ஜே பாலாஜி, உள்பட பலர் நடிப்பில் காலீஷ் இயக்கத்தில் உருவான 'கீ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம் தான் இரும்புத்திரை: விஷால்

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் மித்ரன் இயக்கியுள்ள 'இரும்புத்திரை' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

ஆண்டாளின் புகழ்பாட ஆசைப்பட்டது தவறா? வைரமுத்து உருக்கம்

ஆண்டாள் குறித்த பெரும் சர்ச்சைக்கு நேற்று சென்னை ஐகோர்ட் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனி வருடத்திற்கு ஒருமுறை பஸ் கட்டணம் உயரும்: அமைச்சரின் அதிர்ச்சி அறிவிப்பு

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமே பேருந்தில் செல்கின்றனர் என்பதால் அவர்களுக்கு இந்த கட்டண உயர்வு கடுமையான பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்பது உறுதி.