ஒரு குடும்பம் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கு: சத்யராஜ் 

  • IndiaGlitz, [Sunday,December 01 2019]

கார்த்தி, ஜோதிகா நடித்த ’தம்பி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசும்போது சிவகுமார் குடும்பம் தன்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருப்பதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் இந்த விழாவில் பேசியதாவது ’சிவகுமார் குடும்பம் தான் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றது. நடிகர் சிவகுமார் போன்று நல்ல நடிகராக இருக்க முடியுமா என்ற பயம், அவர் மாதிரி பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியுமா என்ற பயம், இப்படி தொடர்ந்து அந்த குடும்பம் என்னை போன்ற பலரையும் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றார்கள்.

இந்த படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் ’பாபநாசம்’ படத்தை மூன்று மொழிகளிலும் நான் பார்த்தேன். அதன் பின்னர் அவரிடம் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அப்போதுதான் ’தம்பி’ படத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாக ஒரு நல்ல அப்பா கேரக்டர் என்றால் அந்த கேரக்டரில் நடிக்க எனக்கு பிடிக்காது. ஏனெனில் அந்த கேரக்டரில் நடிப்பதற்கு எந்த ஸ்கோப்பும் இருக்காது. ஆனால் இந்த படத்தில் உள்ள அப்பா கேரக்டர் அனைத்து விதமான அம்சங்களையும் பொருந்தி இருந்ததால் இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன்.

பாகுபலி படத்திற்கு பின்னர் எனக்கு கிடைத்த வித்தியாசமான கேரக்டர் இந்த படத்தில்தான் கிடைத்தது. அதனால்தான் சில நேரங்களில் அதிகமாக இன்வால்வ் ஆகி ஓவராக நடித்து விடுவேன். அப்போதெல்லாம் இயக்குனர் ஜீத்து ஜோசப் அப்படி எல்லாம் செய்ய வேண்டாம் நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள் போதும் என்று என்னை கட்டுப்படுத்தி வைப்பார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு எனது நன்றிகள். இவ்வாறு சத்யராஜ் பேசினார்.
 

More News

ரஜினியுடன் இரட்டை பலத்துடன் மோதும் சசிகுமார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளை படக்குழுவினர் விற்பனை செய்து வருகின்றனர்

பிரபல இயக்குனரின் தாயார் மறைவு: சூர்யா இறுதி அஞ்சலி

சூர்யா நடித்த 'சிங்கம்' பட வரிசைகள் படங்கள் உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஹரி. இவரது தாயார் கனி அம்மாள் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81

ஃபாத்திமாவை அடுத்து மேலும் ஒரு மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை: பெரும் பரபரப்பு

சென்னை ஐஐடியில் படித்து கொண்டிருந்த கேரளாவை சேர்ந்த ஃபாத்திமா  என்ற மாணவி சமீபத்தில் தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

'தளபதி 64' படத்தின் இணைந்த 'கைதி' பட நடிகர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

புதையலுக்காக நடந்த கொலை: போலீஸ் அதிகாரி மகனே கொலை செய்த கொடூரம்

புதையல் ஆசையால் போலீஸ்காரர் மகன் ஒருவரே கொலை செய்த சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது அனைவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது