close
Choose your channels

ரஜினியுடன் இரட்டை பலத்துடன் மோதும் சசிகுமார்?

Sunday, December 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளை படக்குழுவினர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட மற்ற போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ரஜினியின் ’தர்பார்’ படத்துடன் பிரபுதேவாவின் ’பொன்மாணிக்கவேல்’ என்ற படமும் சசிகுமாரின் ’எம்ஜிஆர் மகன்’ என்ற படமும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சசிகுமார் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’ராஜவம்சம்’ என்ற திரைப்படமும் அதே பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேவி கதிர்வேல் இயக்கிய இந்தப் படத்தில் ஜோடியாக முதல்முறையாக நிக்கி கல்ரானி நடித்து வருகிறார். மேலும் சதீஷ், யோகிபாபு, மனோபாலா, தம்பிராமையா, ராதாரவி, ரேகா, சுமித்ரா, நிரோஷா உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

ரஜினியின் தர்பார் வெளியாகும் பொங்கல் தினத்தில் சசிகுமாரின் ’எம்ஜிஆர் மகன்’ மற்றும் ‘ராஜவம்சம்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகும் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இவற்றில் ஒருபடம் பின்வாங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.