இந்தியாவிற்கு சவுதி கொடுக்கும் தீபாவளி பரிசு… வயிறு எரிந்து சாகும் பாகிஸ்தான்…

  • IndiaGlitz, [Thursday,October 29 2020]

 

சவுதி அரேபியாவின் போக் ஆர்வலர் இந்தியாவிற்கு தீபாவளி பரிசு எனக் குறிப்பிட்டு ஒரு உலக வரைபடத்தை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அந்த வரைபடத்தில் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர், மற்றும் கில்கிட்-பலுசிஸ்தான் போன்ற பகுதிகள் பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இச்செயலுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.

மேலும் பாகிஸ்தானை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு நடந்து கொள்ள சவுதி முயல்வதாகவும் இது புது கூட்டணிக்கு வழிவகுப்பதாகவும் கருத்துத் தெரிவித்து இருக்கிறது. வருகிற நவம்பர் 21-22 ஆம் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு துவங்க இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த சவுதி அரசை நினைவுக்கூரும் வகையில் சவுதி அரசாங்கம் புதுமையான “20 ரியால்“ ஒன்றை வடிவமைத்து இருக்கிறது. அந்த ரியாலில் உலக வரைபடமும் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வரைபடத்தில் இதுவரை பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி வரும் கில்கிட்-பலுசிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்து சவுதி வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவிற்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு: கில்கிட்- பலுசிஸ்தான் மற்றும் காஷ்மீரை பாகிஸ்தானின் வரைபடத்தில் இருந்து நீக்குகிறது” என்று தலைப்பிட்டு ஒரு படத்தையும் வெளியிட்டு இருக்கிறது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தான் கடும் கண்டனத்தை வெளிப்படுத்த அதற்கு பதில் கூறும் வகையில் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது அதில், கில்கிட் மற்றும் பலுசிஸ்தான் என்று அழைக்கப்படுபவை உட்பட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும் எனத் தெரிவித்து இருக்கிறது.

More News

ஊனமாக நடித்து பிச்சை எடுத்த பெண்மணி… சொத்து மதிப்பை கேட்டு வாயை பிளந்த போலீசார்!!!

எகிப்து நாட்டில் வீல்சேரில் அமர்ந்து பிச்சை எடுக்கும் பெண்மணி ஒருவருக்கு 5 மாடிக்கொண்ட ஒரு அடுக்குமாடி கட்டிடம் ஒன்று

பிசாசு என்று  சித்தரிக்கப்பட்ட அதிபர்… கேலிச் சித்திரத்தால் வெடித்த சர்ச்சை!!!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாமிய மதத்தின் புனிதராகக் கருதப்படும் நபிகள் நாயகத்தை கேலிச் சித்திரமாக வெளியிட்டு இருந்தது சார்லி ஹெக்டே எனும் பத்திரிக்கை.

தமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்… முதல்வர் பழனிசாமி எடுத்த அதிரடி நடிவடிக்கையால் சாத்தியம்!!!

தமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

இதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு: அனிதாவை அசிங்கப்படுத்திய சம்யுக்தா!

பிக் பாஸ் வீட்டில் அனிதா சிரித்து கொண்டிருந்த நேரத்தைவிட அழுதுகொண்டிருந்த நேரமும் புலம்பி கொண்டிருந்த நேரமும் தான் அதிகம் என்பது பார்வையாளர்களின் விமர்சனமாக உள்ளது

அறிக்கை பொய், ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினிகாந்த் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது பெயரில் ஒரு அறிக்கை