close
Choose your channels

முதல்முறையாக நீச்சல் குளம்.. நடிகை சாயிஷா வெளியிட்ட க்யூட் புகைப்படம்..!

Friday, April 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சாயிஷா தனது மகளுக்கு முதல்முறையாக நீச்சல் குளத்தை காண்பித்துள்ளதாக வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த சாயிஷா, நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா அவ்வப்போது தனது மகளின் க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட நிலையில் சற்றுமுன் அவர் தனது மகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மூன்று வயதாகும் தனது மகளை முதன் முறையாக நீச்சல் குளத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கூறி நீச்சல் உடையுடன் கூடிய தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்துக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

கண்டிப்பாக உங்கள் மகள் ஒரு நல்ல நீச்சல் வீராங்கனையாக வருவார் என்றும், இருவரும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் பல்வேறு கமெண்ட்கள் இந்த புகைப்படத்திற்கு பதிவாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சாய்ஷா பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சாய்ஷா சிம்பு நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய நிலையில் அதன் பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.