காலிங் பெல் அடித்த நபரை பாய்ந்து வந்து கடித்த பாம்பு!

  • IndiaGlitz, [Thursday,May 09 2019]

நண்பரின் வீட்டுக்கு சென்ற ஒரு நபர் வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது திடீரென ஒரு பாம்பு பாய்ந்து வந்து கடித்த சம்பவம் அமெரிக்காவில் ஒக்லஹாமா என்ற பகுதியில் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா என்ற பகுதியில் ஜெரல் ஹேவுட் என்பவர் தனது நண்பர் ரோட்னி கோப்லேண்ட் என்பவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது கதவின் மேலிருந்த பாம்பு திடீரென பாய்ந்து வந்து ஜெரல் ஹேவுட் முகத்தில் கடித்தது. இதனால் அலறியடித்த அவரை வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்த வந்தவர்கள் அந்த பாம்பை சிலமணி நேர போராட்டத்திற்கு பின் அடித்து கொன்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் முழுவதும் கதவில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

காருடன் சேர்த்து குழந்தையை எரித்து கொன்ற தந்தை! மனைவியை பழிவாங்க அரங்கேறிய கொடூரம்!

விவாகரத்தான தம்பதியினருக்கு இடையே குழந்தையை யார் வளர்ப்பது என நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில்,  பெற்ற குழந்தை என்றும் பாராமல், தந்தை காருடன் எரித்து கொலைசெய்த சம்பவம்

ஆன்மீக வகுப்பில் பள்ளியறை பாடம்: ஆஸ்திரேலியாவில் இந்திய சாமியார் கைது!

ஆஸ்திரேலியாவுக்கு ஆன்மீக வகுப்பெடுக்க சென்ற இந்திய சாமியார் ஒருவர் பள்ளியறையில் வகுப்பெடுக்க முயற்சி செய்ததால் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்

Mr.லோக்கல் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய Mr.லோக்கல்' திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும்,

தோனி என்ன முடிவெடுப்பார்: ஐஐடி தேர்வில் ருசிகர கேள்வி

நேற்று முன் தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான முதல் பிளே ஆஃப் போட்டியில் டாஸ் வென்ற தல தோனி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

சூர்யாவின் 'என்.ஜி.கே': முதல் நாள் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை!

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே. திரைப்படம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.