close
Choose your channels

காலிங் பெல் அடித்த நபரை பாய்ந்து வந்து கடித்த பாம்பு!

Thursday, May 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நண்பரின் வீட்டுக்கு சென்ற ஒரு நபர் வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது திடீரென ஒரு பாம்பு பாய்ந்து வந்து கடித்த சம்பவம் அமெரிக்காவில் ஒக்லஹாமா என்ற பகுதியில் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா என்ற பகுதியில் ஜெரல் ஹேவுட் என்பவர் தனது நண்பர் ரோட்னி கோப்லேண்ட் என்பவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது கதவின் மேலிருந்த பாம்பு திடீரென பாய்ந்து வந்து ஜெரல் ஹேவுட் முகத்தில் கடித்தது. இதனால் அலறியடித்த அவரை வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்த வந்தவர்கள் அந்த பாம்பை சிலமணி நேர போராட்டத்திற்கு பின் அடித்து கொன்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் முழுவதும் கதவில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.