கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த 2வது மனைவி: ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்

  • IndiaGlitz, [Tuesday,June 30 2020]

திருச்சியை சேர்ந்த ஒருவர் இரண்டு ஊர்களில் இரண்டு மனைவிகள் வைத்து வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் இரண்டாவது மனைவி ஏற்பாடு செய்த கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சையை சேர்ந்த யூசுப் என்பவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் அவர்கள் திருச்சியில் வசித்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குவைத்துக்கு வேலைக்கு சென்ற யூசுப் அங்கு தன்னுடன் பணி செய்து கொண்டிருந்த அசிலா என்ற இலங்கைப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து தஞ்சாவூரில் ஒரு வீடு அமர்த்தி குடிவைத்தார். திருச்சி, தஞ்சை என இரண்டு மனைவிகளுடன் அவர் மாறி மாறி குடும்பம் நடத்தியதாக தெரிகிறது

இந்த நிலையில் தஞ்சையில் இருந்த இரண்டாவது மனைவி அசிலாவின் நடவடிக்கைகளில் சில மாறுதல் இருந்ததை யூசுப் கண்டுபிடித்தார். பேஸ்புக் மூலம் அவருக்கு பல இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அவர்களுடன் தகாத உறவு இருந்ததையும் கண்டுபிடித்தார்

இதனை அடுத்து அவர் கடந்த சில வருடங்களாக அசிலாவை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு யூசுப் மீண்டும் குவைத் சென்றிருந்த போது அவரது வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் வங்கி மேலாளரை தனது வலையில் வீழ்த்தி அசிலா எடுத்து விட்டதாகவும் யூசுப்பின் வங்கி லாக்கரில் இருந்த கோடிக்கணக்கான நகைகள் மற்றும் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த தகவலை அறிந்ததும் உடனடியாக இந்தியா வந்த யூசுப், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கைகள் காரணமாக தனக்கு கிடைத்த கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிபோய் விடுமோ என்ற அச்சம் அசிலாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் பேஸ்புக்கில் அறிமுகமான நண்பர்களின் உதவியால் கூலிப்படையை வைத்து யூசுப்பை கொலை செய்துள்ளார்

இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இரண்டாவது மனைவி அசிலா தான் கூலிப்படையினர்களை ஏவி யூசுப்பை அடித்து கொலை செய்தார் என்பதை கண்டுபிடித்து அதன் பின் அவரை கைது செய்தனர். யூசூப்புக்கு தன்னை போலவே பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், தனக்கு பணம் கொடுத்து வந்ததை யூசுப் நிறுத்தியதால் அவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாகவும் அசிலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

மனைவிக்கு துரோகம் செய்து வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் காதலித்து திருமணம் செய்த யூசுப்பின் வாழ்க்கை சொற்ப ஆயுளில் முடிந்தது மட்டுமின்றி அவரது குடும்பம் இன்று தத்தளித்து வருகிறது என்பது குறிப்ப்பிடத்தக்கது.

More News

வந்தாச்சு... இந்தியாவின் கொரோனா தடுப்பூசி: மனிதர்களுக்கு சோதனை செய்து பார்க்க ICMR ஒப்புதல்!!!

தற்போது, உலக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி குறித்த செய்திகளைத்தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தூத்துக்குடி டிஎஸ்பி, ஏடிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: நீதிமன்றத்தின் அதிரடியால் பரபரப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பாக விசாரணை செய்த மாஜிஸ்திரேட் ஒருவரை ஒருமையில் மரியாதைக்குரிய வகையில் பேசியதாக  சாத்தான்குளம் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மீது புகார் எழுந்துள்ளது.

அரசியல்வாதிகளிடம் பவ்யம், சாமானிய மக்களிடம் அராஜகம்: சாத்தன்குளம் குறித்து பிரபல நடிகரின் நீண்ட பதிவு

சாத்தான்குளம், தந்தை-மகன் லாக்கப் மரணம் குறித்து ஒருசில நடிகர்கள் தவிர கிட்டத்தட்ட அனைத்து கோலிவுட் திரையுலகினர்களும் தங்களுடைய ஆவேசமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்

டிக்டாக், ஹலோ உள்பட 59 செயலிகளுக்கு தடை: இந்தியா அதிரடி உத்தரவு

டிக் டாக், ஹலோ ஆப் உள்பட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! சென்னையில் தொடர்கிறது முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி