'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு சீமான் பாராட்டு

  • IndiaGlitz, [Saturday,October 21 2017]

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் மேடைகளிலும் இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், டிவி போன்ற பொருட்களை கொடுப்பதற்கு பதிலாக கல்வி மற்றும் மருத்துவ வசதியை இலவசமாக அரசு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இதே கருத்தை தளபதி விஜய்யின் 'மெர்சல்' படம் கூறியுள்ள நிலையில் தற்போது 'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தரமான இலவச மருத்துவத்தின் தேவையை வலியுறுத்தி தடைகள் பல தாண்டி வெளிவந்திருக்கும் மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற அன்புக்குரிய தம்பி விஜய், இயக்குனர் தம்பி அட்லீ மற்றும் இப்படத்தை உருவாக்க உழைத்திட்ட அனைத்து படக்குழுவினர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்' என்று அவர் தனது சமூக வலைத்தள பகக்த்தில் தெரிவித்துள்ளார்.

More News

மெர்சல்-ஜிஎஸ்டி பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் திரையுலக பிரபலங்கள்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனம் தற்போது இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆகி வருகிறது. பாஜகவின் எதிர்ப்பையும் மிரட்டலையும் அனைத்து எதிர்க்கட்சிகளும் தட்டிக்கேட்டு 'மெர்சல்'

தேசிய அளவில் விவாதப்பொருள் ஆகும் மெர்சல்-ஜிஎஸ்டி விவகாரம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒருசில கலவையான விமர்சனங்களையும் பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனம்

தமிழிசைக்கு காயத்ரி ரகுராமின் 'மெர்சல்' பதில்

'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி குறித்த வசனங்களுக்கு பாஜக தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருவது தெரிந்ததே. குறிப்பாக தமிழிசை செளந்திரராஜன் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால்

மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி காட்சிகள் நீக்கம்! தயாரிப்பாளர் திடீர் முடிவு

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்கள் படத்தின் ஹைலைட்டாக இருந்தது. ஆனால் இந்த வசனத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எல்லைகளை தாண்டி மெர்சலுக்கு குவியும் பாராட்டுக்கள்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் கதை ஒருசில பழைய படங்களின் காப்பி என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் விஜய் ரசிகர்கள் மற்றும் நடுநிலை ரசிகர்களின் பேராதரவால்