close
Choose your channels

இதுக்கு முன்னாடி விஜய் படத்துல சிகரெட் காட்சி இல்லையா? சீமான் ஆவேசம்..!

Sunday, July 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’நா ரெடி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் அவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி காவல் துறையில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ’இதற்கு முன்னர் விஜய் படத்தில் சிகரெட் காட்சியே வந்ததில்லையா? மது குடிப்பது போன்ற அவர் நடித்ததே இல்லையா? வன்முறை காட்சிகள் அவர் படத்தில் வந்ததே இல்லையா?

அப்பொழுதெல்லாம் ஏன் அவர்கள் புகார் கொடுக்கவில்லை? விஜய் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்ற பயத்தினால் தான் தற்போது புகார் கொடுக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.

ஒருவேளை விஜய் அந்த பாடலை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டால் உடனே குடிப்பவர்கள் எல்லாம் திருந்தி விடுவார்களா? எத்தனை படத்தில் எத்தனை நடிகர்கள் சிகரெட் குடிப்பது போன்ற காட்சி உள்ளது, அப்போதெல்லாம் இவர்கள் ஏன் பேசவில்லை? டாஸ்மாக்கை மூடுவதற்கு வக்கில்லாதவர்கள் இதைப் பற்றி எல்லாம் பேசவே கூடாது’ என்று தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos