வைரமுத்து மீதான கோபத்தில் இளையராஜா செய்தது இதுதான்: சீனுராமசாமி

  • IndiaGlitz, [Saturday,May 04 2024]

இசைஞானி இளையராஜா மற்றும் வைரமுத்து குறித்த சர்ச்சையை கடந்த சில நாட்களாக வெளியாகி கொண்டிருக்கிறது என்பதும் இசை பெரிதா? மொழி பெரியதா? என்று வைரமுத்து பேசியதற்கு கங்கை அமரன் செய்த விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்..

இந்த நிலையில் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் இந்த விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது:

உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான். வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல டியுன்களுக்கு நிறைய Dummy lyrics ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா அவர்கள்

முன்னதாக வைரமுத்து, இளையராஜா விவகாரம் குறித்து மறைமுகமாக தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

குயில்
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்

புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்

வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்

மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன் குரலைத்
தணித்துக்கொள்ள வேண்டும்

அதுதான்
நடந்து கொண்டிருக்கிறது

More News

40 ஆனால் நாட் அவுட்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் த்ரிஷா..!

நடிகை த்ரிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரியோவுடன் மீண்டும் இணையும் 'ஜோ' நாயகி.. இயக்குனர், தயாரிப்பாளர் குறித்த விவரங்கள்..!

ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் நடித்த 'ஜோ' திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும்

கரீனா கபூர் நடிக்கவிருந்த கேரக்டரில் நயன்தாரா? மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் இப்படி ஒரு கேரக்டரா?

மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் கரீனா கபூர் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு பதில் தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வழக்கம் போல் ஒரு கலக்கல் புரமோ.. 4 நிமிட வீடியோவுடன் நெல்சன் - கவின் படத்தின் அறிவிப்பு..!

பொதுவாக நெல்சன் படம் என்றாலே புரமோ வீடியோ மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதும் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பது தெரிந்தது. குறிப்பாக 'ஜெயிலர்'

மொரிஷியஸ் நாட்டில் இளையராஜா குடும்பம்.. யுவனுக்கு சாப்பாடு ஊட்டும் இசைஞானி..!

இசைஞானி இளையராஜா கடந்த சில நாட்களுக்கு முன் மொரிஷியஸ் நாட்டிற்கு தனது குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்றிருந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் புகைப்படம் வைரல்