'வெல்கம் டு 20s கிளப்: ஷிவானி அம்மாவுடன் பாலாஜியின் செல்பி புகைப்படம் வைரல்!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய ஷிவானி நாராயணன் நேற்று தனது 20 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளரான பாலாஜி கலந்து கொண்டார். அவர் ஷிவானிக்கு கேக் ஊட்டுவது உள்பட ஒரு சில செல்பி புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிவானி அம்மாவின் தோள் மீது கைபோட்டு எடுத்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அவர் இந்த போஸ்ட்டில் கேப்ஷனாக, ’வெல்கம் டு 20s கிளப்’ என்று ஷிவானிக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பாலாஜியுடன் நெருக்கமாக இருந்ததற்காக ஷிவானியை அவரது அம்மா கடுமையாக திட்டினார் என்பதும் பாலாஜியிடம் மட்டும் தான் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாலாஜியுடன் அவர் செல்பி புகைப்படம் எடுத்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments