ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா செல்வராகவனின் அடுத்த படம்?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் கடந்த 20 ஆண்டுகளில் எட்டு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். இருப்பினும் அவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காவியமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ’என்.ஜி.கே’ என்ற திரைப்படம் வெளியான நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகிய ‘மன்னவன் வந்தானடி’ மற்றும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய இரண்டு படங்கள் ஒரு சில ஆண்டுகளாக வெளிவராமல் முடங்கி உள்ளது.

அந்த வகையில் தற்போது அவற்றில் நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்ட நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா, பாபிசிம்ஹா, பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை காவல்நிலையத்தில் விஜய் புகார்: என்ன காரணம்?

தளபதி விஜய் திடீரென சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

செல்வராகவன் வீட்டிற்கு புதிய விருந்தாளி: திரையுலகினர் வாழ்த்து!

தமிழ் திரையுலகில் திறமையான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவருடைய ஒவ்வொரு படமும் பல ஆண்டுகள் பேச வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஆரிக்கு ஆதரவாக பேசிய பாலாஜி: எதிர்ப்பை தொடரும் ரம்யா

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்று வரும் ஃபினாலே டாஸ்க் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஏற்கனவே 7 சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில் சோம் மற்றும் ரியோ 32

முதலீட்டு சூட்சமத்தால் தொழில்துறை வளர்ச்சி… அதிரடி காட்டிய தமிழக முதல்வர்!!!

கொரோனா நேரத்திலும் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முதலீடுகள் பன்மடங்காக அதிகரித்தது உள்ளது

கடலில் சிக்கி தவித்த மீனவர்களை ட்ரோன் கேமரா மூலம் காப்பாற்றிய ஹீரோ… ஊரே மெச்சும் சாதனை!!!

கடலில் சிக்கி தவித்த 4 மீனவர்களை ட்ரோன் கேமரா மூலம் அடையாளம் கண்டு அவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறார்