சூர்யாவுடன் மீண்டும் இணைய பிரபல இயக்குனர் விருப்பம்

  • IndiaGlitz, [Friday,August 10 2018]

நடிகர் சூர்யா ஒரு கேரக்டரில் நடிக்க தொடங்கிவிட்டால் அந்த கேரக்டராகவே மாறிவிடுவார் என்பது தெரிந்ததே. தான் ஏற்று கொண்ட கேரக்டருக்காக அவர் தரும் உழைப்பு, ஒத்துழைப்பை போற்றாத இயக்குனர்கள் இருக்க முடியாது.

அந்த வகையில் தற்போது சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் 'என்.ஜி.கே. படத்தை இயக்கி வரும் இயக்குனர் செல்வராகவன், இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு குறித்து கூறியபோது, 'இந்த அளவுக்கு ஒரு கேரக்டருக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கடின உழைப்பை சூர்யாவால் மட்டுமே கொடுக்க முடியும். நான் இயக்கிய நடிகர்களில் மீண்டும் ஒரு நடிகருடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்றால் அது சூர்யாவாக மட்டுமே இருக்க முடியும்' என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் உடல்நலமின்றி இருந்த செல்வராகவன், தற்போது உடல்நலம் தேறி மீண்டும் முழுவீச்சில் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்த படத்தை வரும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்

சூர்யா, ரகுல்ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.
 

More News

கமல்ஹாசன் முடிவால் ஸ்ருதி, அக்சரா அதிருப்தி

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்

ராகவா-ஓவியாவின் 'காஞ்சனா 3' ரிலீஸ் குறித்த தகவல்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் ஓவியா நடித்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவில் வரலாறு காணாத கனமழை: வெள்ளம், நிலச்சரிவால் 20 பேர் பலி

கேரள மாநிலத்தில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்

ஸ்ரீரெட்டி வெளியிட்ட ஆபாச வீடியோ: சமூக வலைத்தள பயனாளிகள் அதிர்ச்சி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, டோலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

'விஸ்வரூபம் 2' வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில்