close
Choose your channels

செந்தில்-ராஜலட்சுமியா இது? காதலர் தின புகைப்படங்களால் இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Thursday, February 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்று தற்போது திரைப்படங்களில் பாடி வரும் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடி சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு திருமண கோலத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவருமே கலந்து கொண்டனர். இருவருமே கிராமிய பாடகர்கள் என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிகழ்ச்சியில் இடையில் ராஜலட்சுமி எலிமினேட் செய்யப்பட்டாலும் செந்தில் இறுதிப் போட்டி வரை சென்று டைட்டில் பட்டத்தையும் வென்றார். இதனையடுத்து அவர் திரைப்படங்களிலும் பாடி வருகிறார் என்பதும் செந்தில் ராஜலட்சுமி ஜோடியாகவும் பாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாக ஆக்டிவ்வாக இருக்கும் செந்தில் - ராஜலட்சுமி திருமண கோலத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். காதலர் தினத்தில் செம ரொமான்ஸ் ஆக இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment