அச்சு அசலாக சாவித்ரியாக மாறிய சீரியல் நடிகை: வைரலாகும் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,July 06 2021]

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான நடிகர் திலகம் சாவித்ரி நடிப்பைப் பற்றி யாருக்கும் கூற வேண்டிய அவசியமே இல்லை. எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சாவித்ரி, நடிப்பில் சிகரம் தொட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார் என்பதும் ‘நடிகையர் திலகம்’ என்ற இந்த படத்தின் மூலம் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு நடிகையும் சாவித்ரி போல் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் தான் வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீரியல் நடிகை ரேஷ்மா வெங்கடேஷுக்கும் அதேபோன்ற ஒரு ஆசை வந்துள்ளது. ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி அதன் பின்னரும் ’குஷி’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்துள்ள ரேஷ்மா வெங்கடேஷ், சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளவர்.இந்த நிலையில் ரேஷ்மா வெங்கடேஷ் சமீபத்தில் சாவித்ரி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் எனது குரு சாவித்ரி அம்மா கெட்டப்பில் இருப்பதற்குத்தான் பெருமைப்படுகிறேன் என்றும் சாவித்ரி அம்மாவை இந்த தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்த்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தனது நன்றி’ என்றும் தெரிவித்துள்ளார். பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வூட்டுக்காரா: கனி வெளியிட்ட புகைப்படம் வைரல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் முடிவடைந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும்

சனம்ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவரா? திடுக் தகவல்

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சனம்ஷெட்டிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் சமூக

மனைவி பிறந்த நாளில் கேக் ஊட்டிய பிக்பாஸ் ஆரி: வைரல் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரி என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியால் ஆரியின் இமேஜ் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது

உன் பொண்டாட்டி போட்டோவ மார்பிங் செய்து போடட்டுமா...? மிரட்டும் சுப்புலட்சுமி...!

கடந்த 2 வாரங்களாகவே ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி குறித்த செய்திகள் தான் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

பப்ஜி மதன் மீது பாய்ந்த குண்டார்ஸ்......! இனி ஓராண்டுக்கு புழலில் கம்பி எண்ண வேண்டியதுதான்....!

யுடியூபில் பப்ஜி விளையாட்டிற்காக ஆபாச வீடியோக்களை பதிவிட்ட மதன் மீது, ஆன்லைனில் 159 புகார்கள் வந்து குவிந்திருந்தன.