நல்ல வாய்ப்பு கிடைத்தால் திரைப்படங்களில் மீண்டும் நடிப்பேன்; சீரியல் நடிகை ஸ்ரீதேவி!

  • IndiaGlitz, [Monday,February 01 2021]

தனுஷ் நடித்த ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ ’தேவதையை கண்டேன்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதேவி அசோக், தற்போது சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் திரைப்படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’காற்றுக்கென்ன வேலி’ மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’பூவே உனக்காக’ ஆகிய சீரியல்களில் ஸ்ரீதேவி அசோக் நடித்து வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக திரை உலகம் மற்றும் சின்னத்திரை உலகில் நடித்து வரும் ஸ்ரீதேவி அசோக்கை பிரபலப்படுத்தியது ‘ராஜா ராணி. என்ற சீரியல் தான். அதேபோல் தங்கம், கல்யாண பரிசு ஆகிய சீரியல்களும் இவருக்கு புகழை பெற்று தந்தது

தற்போது இவரும் ’காற்றுக்கென்ன வேலி’ என்ற சீரியலில் சியாமளா என்ற காமெடி மற்றும் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். அதேபோல் ’பூவே உனக்காக’ சீரியலிலும் ஒரு பாசிட்டிவான கேரக்டரில் அவர் தற்போது நடித்து வருகிறார்

தனுஷின் இரண்டு திரைப்படங்களில் நடித்த நிலையில் படிப்பு மற்றும் திருமணம் காரணமாக திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க முடியாமல் இருந்த ஸ்ரீதேவி அசோக், தற்போது திரைப்படங்களில் நல்ல கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயார் அவர் கூறியுள்ளார்

More News

மனைவியின் கர்ப்பத்தை டெலிவரி தேதியுடன் அறிவித்த மகத்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான மகத் தனது மனைவி பிராய்ச்சி கர்ப்பமாக இருப்பதை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்து டெலிவரி தேதியையும் அறிவித்துள்ளார் 

4 மொழிகளில் 'சக்ரா': ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த விஷால்!

விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக நடிகர் விஷால் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில்

தமிழ் இயக்குனரின் அடுத்த படத்திற்காக இணையும் திருமாவளவன் - விஜய்சேதுபதி!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'தெருநாய்கள்', 2018ஆம் ஆண்டு வெளியான 'படித்தவுடன் கிழித்து விடவும்,  மற்றும்  2020ஆம் ஆண்டு வெளியான 'கல்தா' ஆகிய படங்களை இயக்கியவர் ஹரி உத்ரா

பிரபல ஒளிப்பதிவாளர் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்!

பாரதிராஜா இயக்கிய '16 வயதினிலே' படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அதன் பின்னர் 'கிழக்கே போகும் ரயில்' 'சிகப்பு ரோஜாக்கள்' 'இளமை ஊஞ்சலாடுகிறது' 'புதிய வார்ப்புகள்' 'நிறம் மாறாத பூக்கள்' உள்பட

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்? எத்தனை தொகுதிகள்?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக உள்ளன.