ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சந்தானம் பட இயக்குனர்!

  • IndiaGlitz, [Saturday,February 15 2020]

நடிகர் சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் இன்னும் அந்த படம் ரிலீஸாகவில்லை. சந்தானம் நடித்த ’டகால்டி’ திரைப்படம் கடந்த 31ஆம் தேதி வெளியான நிலையில் அதே தேதியில் சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’ என்ற திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியிலும் ரிலீஸ் ஆகாமல் தற்போது இந்த படம் பிப்ரவரி 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ரிலீஸ் தேதி குறித்த தவறாக அறிவிப்புகளுக்கு ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒருசிலர் செய்த தவறுகளினால் இது நடந்துள்ளது. இந்த படத்தின் பிரச்சனை அனைத்தும் முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன். எனவே சந்தானம் உள்பட படக்குழுவினர் விரைவில் புரமோஷனை தொடங்கவுள்ளனர். விரைவில் சரியான ரிலீஸ் தேதியை அறிவிக்கின்றோம் என்று கூறியுள்ளார். இதிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதியும் இந்த படம் வெளிவர வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாந்தில்யா என்பவர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிரண் ரத்தோட், ராதாரவி, மயில்சாமி, சினேகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More News

த்ரிஷாவின் 'பரமபதம் விளையாட்டு'க்கு பாராட்டு தெரிவித்த பிரபல நடிகை

நடிகை த்ரிஷா நடித்த 'பரமபதம் விளையாட்டு' என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஒரு புலி இன்னொரு புலியை புகைப்படம் எடுத்திருக்கிறது..! தோனி பற்றிய வைரல் கமெண்ட்.

இதனை, 'புலியை படம் எடுத்த புலி'என்று தோனியின் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.ரசிகர் ஒருவர் தோனியை புலி என்று குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1700 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோணா தொற்று... திணறும் சீனா.

சீனாவில் 1,700 மருத்துவப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

தமிழர்களைக் கொன்ற இலங்கை ராணுவ தளபதி அமெரிக்காவுக்குள் நுழைய தடை..!

2009ல் நடந்த ஈழ இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த படையணியின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் வர அந்த நாட்டு அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

'கனா' படத்தை தயாரித்ததால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மரியாதை!

மகளிர் உலகக் கோப்பை போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர் சிவகார்த்திகேயனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் அணுகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது