கேன்ஸ் விழாவில் நடிகை சமந்தாவின் திரைப்படத்திற்கு விருதா? மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,May 30 2023]

உலக அளவில் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விருது விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படத்திற்கு பல பிரிவுகளில் விருது கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் ‘சாகுந்தலம்‘ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. புராணக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் நடிகர் தேவ் மோகன், அல்லு அர்ஹா, சச்சின் கடேகர், கபீர் பேடி, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா என்று ஏராளாமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மணி ஷர்மா இசையில் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் 3டி வடிவிலும் வெளியாகியது.

ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிய இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை என்றும் பட ஆக்கம் குறித்தும் இன்னும் சில குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் சிறந்த இந்தியத் திரைப்படம் வரிசையில் ‘சாகுந்தலம்’ திரைப்படத்திற்கு கேன்ஸ் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தகவல் தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் ‘சாகுந்தலம்’ திரைப்படத்திற்காக காஸ்டியூம் டிசைன் செய்த நீதி லுல்லாவிற்கு ‘சிறந்த ஆடை வடிவமைப்பு‘ பிரிவில் கேன்ஸ் விருது அறிவிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சாகுந்தலம் திரைப்படம் குறித்து பல எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உலக அளவில் மதிப்புமிக்க விருதான கேன்ஸ் விருதில் ‘சிறந்த இந்தியத் திரைப்படம்’ மற்றும் ‘சிறந்த ஆடை வடிவமைப்பு‘ என்று இரு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தையும் உற்சாகத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

More News

14 ஓவர் முடிந்ததும் கதறியழுத  இளம்பெண், வெற்றி பெற்றதும் துள்ளி குதித்த காட்சி: வைரல் வீடியோ..!

 நேற்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியில் 14 ஓவர் முடிவில் சென்னை அணி 6 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போது பலருக்கு சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை.

தீபக் சஹாருக்கு கையெழுத்து போட மறுத்த தோனி.. என்ன காரணமாக இருக்கும்?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து வெற்றிக்கு காரணமான ஜடேஜாவுக்கும் அணியின் கேப்டன் தல தோனிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து

ஒரே விளையாட்டு.. ஒரு அணி.. ஒரு மனிதன்.. தோனிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து..!

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக கைப்பற்றிய நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும்

அடுத்த வருடம் விளையாடுவாரா தோனி?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதனை அடுத்து கோப்பையைப் பெற்றுக்

தோனியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.. ஜட்டுவை தூக்கி வைத்து கொண்டாட்டம்..!

பொதுவாக தல தோனி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த கொள்ள மாட்டார், அதே போல் தோல்வி அடைந்தாலும் கூட வருத்தத்தையும் வெளிக்காட்ட மாட்டார்.