இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தையை தத்தெடுத்த பிரபல நடிகர்

சமீபத்தில் குஜராத்திலிருந்து பீகார் மாநிலம் முசாபூருக்கு தனது 2 வயது குழந்தையுடன் சென்ற பெண் ஒருவர், முசாபூர் ரயில் நிலையத்தை அடையும் முன்னரே உயிரிழந்தார். இதனை அடுத்து முசாபர் ரயில் நிலையத்தில் அந்த பெண்ணின் உடல் போர்வையால் மூடப்பட்டு ஆம்புலன்ஸ் வரும் வரை வைக்கப்பட்டிருந்த நிலையில் தாய் இறந்தது கூட தெரியாமல் அவருடைய பச்சிளம் குழந்தையை அவர் மேல் மூடப்பட்டிருந்த போர்வையை எடுத்து அவரை எழுப்ப முயற்சித்தது. இதுகுறித்த வீடியோ நாடு முழுவதும் வைரலானது

இந்த நிலையில் முசாபர் ரயில் நிலையத்தில் இறந்த தாயை, எழுப்ப முயன்ற குழந்தையை நடிகர் ஷாருக்கானின் 'மீர்' பவுண்டேஷன் தத்து எடுத்துள்ளது. இந்த தகவலை ஷாருக்கான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

பெற்றோரை இழந்த வலியை, தாங்க இறைவன் குழந்தைக்கு வலிமை அளிக்க வேண்டும் என்று வேண்டுவதாகவும், அந்த வலி எப்படி இருக்கும் என்று தமக்கு தெரியும் என்றும் குறிப்பிட்ட ஷாருக்கான், நமது  அன்பும் ஆதரவும் குழந்தைக்குத் தேவை என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பீகார் குழந்தையை தத்தெடுத்த ஷாருக்கானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

More News

விஜய்-ஜிவி பிரகாஷ் கூட்டணி செய்த சாதனை: சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்!

தளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் பல சாதனைகள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்

கொரோனா அவசரகால சிகிச்சைக்கு Remdesivir மருந்து!!! ஒப்புதல் வழங்கிய இந்தியா!!!

இதுவரை கொரோனா சிகிச்சைக்கு என்று முறைப்படுத்தப் பட்ட எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப் படாத நிலையில் Remdesivir

ஆம்பன் புயலை அடுத்து இந்தியாவை தாக்க இருக்கும் இன்னொரு சூறாவளி!!!

இந்தியாவின் அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது.

வீடு தேடி வருகிறேன்: பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளையராஜா

இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலக பிரமுகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்

3வது நாளாக 1000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: 25 ஆயிரத்தை நெருங்குவதால் பரபரப்பு

இன்று தமிழகத்தில் 1091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24586 ஆக உயர்ந்துள்ளது