close
Choose your channels

திரையுலகில் நுழையும் ஷாருக்கான் மகன்.. முதல் படத்தில் என்ன செய்கிறார் தெரியுமா?

Wednesday, December 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் திரையுலகில் நுழைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் திரைப்பட கல்லூரியில் படித்த ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் நடிகராக அல்லது இயக்குனராக விரைவில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாவார் என பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் தான் இயக்குனராக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யன்கான் அறிவித்துள்ளார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட்சில்லீஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாகவும், கதையை எழுதி முடித்து விட்டதாகவும், இயக்குனராக அறிமுகமாக போவதாகவும் ஆர்யன்கான் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மகனின் இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்து ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்து தனது கனவு நனவாகி விட்டது என்றும் இனிமேல் தான் நீ தைரியமாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த ஆர்யன்கான், என்னுடைய படத்தின் படப்பிடிப்பில் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஷாருக்கான் நான் படப்பிடிப்பு தளத்திற்கு வர வேண்டும் என்றால் அதிகாலையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என்றும் பிற்பகலில் நடத்தும்படியும் கூறியுள்ளார்.

ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் இந்த அறிவிப்புக்கு அவருடைய தாயார் கௌரி கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி பாலிவுட் திரையுலகினர் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கானின் மகள் சுஹானா ஏற்கனவே திரையுலகில் இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது அவரது மகன் ஆர்யன்கான் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாக இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment