close
Choose your channels

'குக் வித் கோமாளி' ஷகிலா மகள் பிக்பாஸ் போட்டியாளரா?

Thursday, April 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. அனேகமாக ஜூன் மாதம் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டு வருகின்றன. ஏற்கனவே நடிகர்கள் ராதாரவி, மன்சூரலிகான், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர்களும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனி, சுனிதா, பவித்ரா ஆகியவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது அதேபோல் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இனியன், பிளாக் ஷீப் யூடியூப் சேனலின் ஆர்ஜே வினோத் உள்பட பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் கசிந்த தகவலின்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா அவர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது இந்த சீசன் களைகட்டும் என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.