இந்திய திரையுலகில் முதல்முறையாக ஃபர்ஸ்ட்லுக் ரிலீசுக்கு பிரமாண்டவிழா

  • IndiaGlitz, [Wednesday,November 16 2016]

ஷங்கர் என்றாலே பிரமாண்டம்தான் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் ஷங்கருடன் லைகா நிறுவனம் சேர்ந்தால் பிரமாண்டத்தின் எல்லையை வரையறுக்கவே முடியாது. பாடல் வெளியீடு, பட வெளியீடு ஆகியவற்றையே ஒருசில பட அதிபர்கள் எளிமையாக நடத்தி வரும் நிலையில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் பர்ஸ்ட்லுக் விழாவுக்கே மிகப்பெரிய தொகை செலவு செய்யப்பட்டு பிரமாண்டமான விழா ஒன்று நடைபெறவுள்ளது.,
வரும் 20ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் ரஜினிகாந்த், ஷங்கர், சுபாஷ்கரன், ஏ.ஆர்.ரஹ்மான், எமிஜாக்சன் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரண்ஜோஹர் இந்த விழாவை தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்திய திரையுலகில் முதல்முறையாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கே மிகப்பெரிய அளவில் விழா நடத்தி கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த விழா லைகா நிறுவனத்தின் யூடியூப் வீடியோ சேனல் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் ஆப்ஸ்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

More News

விஜய்க்கு கணக்கு தெரியவில்லை என தா.பாண்டியன் கூறியது சரியா?

பிரதமரின் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நேற்று விஜய் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தை பரபரப்பு அடைய செய்துள்ளது...

மாதவன் - விஜய்சேதுபதி படத்தில் பாலா நாயகி

மாதவன், விஜய்சேதுபதி முதன்முதலாக இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர் என்பதும் இந்த படத்தை

4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீர்த்திசுரேஷ்

பிரபல நடிகை மேனகாவின் மகளும் பிரபல நடிகையுமான கீர்த்திசுரேஷ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளது...

தனுஷின் 'பவர்பாண்டி'யில் இணைந்த பிரபல காமெடி நடிகை

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்த வந்த தனுஷ், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கி வரும் திரைப்படம் 'பவர்பாண்டி'.

விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் நடந்த குழந்தைகள் தினவிழா கொண்டாட்டங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தினவிழா இனிதே கொண்டாடப்பட்டது...