ஷங்கர் - ராம்சரண் தேஜா படம் முதலமைச்சர் கதையா?

  • IndiaGlitz, [Thursday,September 09 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் கதையை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

இந்த படத்தின் கதை ஒரு மாநில முதலமைச்சரின் கதை என்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த ஒருவர் முதலமைச்சருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனிக்கட்சி ஆரம்பித்து, ஆட்சியை பிடிப்பது தான் கதை என்றும் கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ’முதல்வன்’ படமும் முதலமைச்சர் சம்பந்தப்பட்ட கதை என்பதும் தெரிந்ததே. தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு கதையை எடுத்தாலும் திரைக்கதையில் அவர் வித்தியாசம் காட்டி இருப்பார் என்பது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெலுங்கில் இந்த படம் ஒரிஜினலாக உருவாக இருப்பதை அடுத்து இந்த படத்தின் தமிழ் வசனங்களை எழுத்தாளரும் மதுரை தொகுதி எம்பியுமான சு.வெங்கடேசன் அவர்கள் பாடலாசிரியர் விவேக் உடன் இணைந்து எழுத இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பில் அரசியல் வசனங்கள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கணவர், குழந்தையுடன் மியா ஜார்ஜ்: வைரல் புகைப்படங்கள்

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகை மியா ஜார்ஜ் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

காங்கோவில் பரவும் புதிய கொள்ளை நோய்… எகிறும் உயிரிழப்பால் அதிர்ச்சி!

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் தற்போது பாக்டீரியாவால் ஏற்படும் “மெனுஞ்சைத்திஸ்”

நடிகர் சதீஷின் குழந்தை செய்த காமெடி: வைரல் புகைப்படங்கள்!

நடிகர் சதீஷின் குழந்தை செய்த காமெடி ஒன்றின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

டி20 இந்திய அணியில் அஸ்வின் தேர்வுக்கு இதுதான் காரணமா?

ஆஃப் ஸ்பின்னரான ரவிசந்திரன் அஸ்வின் 4 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிம்புவின் திருமணத்திற்கு பின்னர் தான் என்னுடைய திருமணம்: பிரபல நடிகர்

சிம்புவின் திருமணத்திற்கு பின்னர்தான் தனது திருமணம் என பிரபல நடிகர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.