'இந்தியன் 2' விபத்து, ஷங்கரின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,February 28 2020]

கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குனர் உள்பட மூவர் பலியாகினர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடியும் லைகா நிறுவனம் ரூ.2 கோடியும் நிதியுதவி செய்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இயக்குநர் ஷங்கர் ஒரு கோடி ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சற்றுமுன் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும், சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எவ்வளவு உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது என்றும், இருப்பினும் அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாயை அளிப்பதாகவும் ஷங்கர் கூறியுள்ளார். ஷங்கர் கொடுத்த ஒரு கோடி ரூபாயுடன் சேர்த்து இதுவரை பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட த்ரிஷா படத்தயாரிப்பாளர்

த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கிய 'பரமபதம் விளையாட்டு' திரைப்படம் நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் வரும் 28ஆம் தேதி அதாவது நாளை வெளியாக இருந்தது.

கள்ளக்காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது!

கள்ளக்காதலியை சந்திப்பதற்காக மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கலவரத்தை தூண்டியவர்களை கைது செய்ய சொல்லிய நீதிபதியை உடனடி இடமாற்றம் செய்த மத்திய அரசு..!

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரை பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் குடியரசுத் தலைவர்.

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் 'டாக்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

கொரோனா வைரஸ்.. ஜப்பானில் அனைத்து கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைத்தது ஜே-லீக்..!

"நாளை திட்டமிடப்பட்ட லெவின் கோப்பை போட்டிகளையும் அனைத்து அதிகாரப்பூர்வ ஆட்டங்களையும், மார்ச் 15 வரை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம்" என்று ஜே-லீக்