ஷங்கரின் அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி? நாயகன் இந்த மாஸ் ஹீரோவா?

  • IndiaGlitz, [Saturday,September 10 2022]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜாவின் ’ஆர்சி 15’ மற்றும் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ ஆகிய படங்களை இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக அவர் இயக்கயிருக்கும் படத்தின் பட்ஜெட் ரூ 1000 கோடி என்று கூறப்படுகிறது.

‘இந்தியன்2’ மற்றும் ’ஆர்சி 15’ ஆகிய படங்களை முடித்துவிட்டு இயக்குனர் ஷங்கர் ஒரு சரித்திரப் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய ’வேள்பாரி’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக திரைக்கதை அமைக்கும் பணியை எம்பி சு வெங்கடேசன் என்று தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யா நாயகனாக ’வேள்பாரி’ கேரக்டரில் நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ரூ.1000 கோடி செலவில் உருவாகும் இந்த படம் தமிழ் உள்பட இந்தியாவின் பல மொழிகளில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’பொன்னியின்’ செல்வன் என்ற சரித்திர திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சூர்யாவின் அடுத்த படமான ’சூர்யா 42’ திரைப்படமும் சரித்திர படம் என்று நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் ஷங்கரின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படமும் சரித்திர படம் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாடகியை அடுத்து சிவகுமார் மகளின் அடுத்த அவதாரம்: சூர்யா, கார்த்தி வாழ்த்து!

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகளும், சூர்யா கார்த்தியின் சகோதரியுமான பிருந்தா ஏற்கனவே பாடகியாக இருந்த நிலையில் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்

அஜித் பாதையை தேர்வு செய்த ரம்யா பாண்டியன்.. உதவி செய்த திரையுலக பிரபலம்!

அஜித்தின் பாதையை தேர்வு செய்த நடிகை ரம்யா பாண்டியனுக்கு திரை உலக பிரபலம் ஒருவர் உதவி செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

நான் ஆடி பார்த்திருப்ப, பாடி பார்த்திருப்ப, நாறு நாறா கிழிச்சு பாத்துருக்கியா? 'சன்னிலியோனின் 'ஓ மை கோஸ்ட்' டீசர்

பல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் 'ஓ மை கோஸ்ட்' என்ற தமிழ் படத்தில் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம். 

ரெண்டே ரெண்டு நிமிடங்கள் தான்: நடிகை ரெஜினா கூறிய அடல்ட் ஜோக்

நடிகை ரெஜினா சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய அடல்ட் ஜோக் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இயக்குனர் பாரதிராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்: என்ன செய்தார் தெரியுமா?

இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ள நிலையில் அவரது வீட்டிற்கு திடீரென தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்