close
Choose your channels

8000 துணை நடிகர்கள்.. ஹாலிவுட் தரம்.. ஷங்கரின் பிரமாண்ட படப்பிடிப்பு..!

Wednesday, November 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் தேஜா நடித்து வரும் ’கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் ’இந்தியன் 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் விஜயவாடாவில் உள்ள அலங்கார் சென்டர் என்ற இடத்தில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த படப்பிடிப்பில் சுமார் 8000 துணை நடிகர்கள் நடித்து வருவதாகவும் ஹாலிவுட் படம் போல பிரமாண்டமாக காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த படத்திற்காக கமல்ஹாசன் மேலும் சில நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் அவர் இன்னும் ஓரிரு நாளில் அந்த படத்தில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

மிகப்பெரிய அளவில் துணை நடிகர்கள் கூட்டத்துடன் படமாக்குவது என்பது ஒரு பெரிய சவால் என்றும் அந்த சவாலை ஷங்கர் எளிதாக சமாளித்து வருகிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ’இந்தியன் 2’ மட்டும் இன்றி ’இந்தியன் 3’ படமும் உருவாகும் என்று கூறப்படுவதால் அதற்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

கமல்ஹாசன், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசாகர், விவேக், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் ’இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment