close
Choose your channels

வேலைக்காரியை முத்தமிட்ட கணவரை சாத்து சாத்து என சாத்திய ஷில்பாஷெட்டி

Thursday, May 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த லாக்டவுன் நேரத்தில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்கள் என்பதும், அவை ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஷில்பா ஷெட்டி பிசியாக வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது அவரது கணவர் ராஜ் குந்த்ரா முத்தம் கொடுக்க வருகிறார். அப்போது ஷில்பா ஷெட்டி அவரை தடுத்து தான் வேலையில் இருப்பதாகவும் இந்த நேரத்தில் முத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் கூறுகிறார்

அப்போது அங்கே இருக்கும் வேலைக்காரி ’நல்லா புரியும் படி சொல்லுங்க, நானும் பல தடவை சொல்லிவிட்டேன் கேட்க மாட்டேன் என்கிறார்’ என்று கூற, அதன் அர்த்தத்தை புரிந்துகொண்ட ஷில்பா ஷெட்டி தனது கணவரை சாத்து சாத்து என சாத்துகிறார். இந்த வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விட்டது. இந்த வீடியோ வெளியான ஒரு சில மணிநேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பதும் ஷில்பா ஷெட்டியின் தங்கை உள்பட பலர் இந்த வீடியோவுக்கு காமெடியான கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.